பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை பெற்றது. சுமார் 237 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இந்த சாதனையை இன்னும் எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவதார் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அவதார் 2' படமும், 2019ஆம் ஆண்டு அவதார் 3' படமும் வெளிவர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று பாகமும் தனித்தனி கதை அமைப்புகளை கொண்டது என்று தெரிவித்துள்ள ஜேம்ஸ் கேமரூன், இதுவொரு மிகப்பெரிய கதையை கொண்டது என்றும் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூனின் இந்த அறிவிப்பு அவதார் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அவதார் 2
,
அவதார் 2 ரிலீஸ் தேதி. ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு
,
சினிமா