கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா. ஸ்ருதி முன்னணி நடிகையாக டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். ‘ஷமிதாப்’ இந்தி படம் மூலம் அக்ஷரா நடிகையாக அறிமுகமானார்.
எதிர்பார்த்தளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதற்கிடையில் நடிகர் விவான் ஷாவுடன் அக்ஷராவுக்கு காதல் இருப்பதாக பேச்சு உள்ளது. இருவரும் அடிக்கடி ஜோடியாக பல இடங்களுக்கு டேட்டிங் செல்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் முதன்முறையாக படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.
‘லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா’ இந்தி படத்தில் இருவரும் நடிக்க உள்ளனர். ராஜ் குமார் சந்தோஷியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். உயர் அந்தஸ்து குடும்ப திருமணத்தை பின்னணியாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக் கிறது.
விவான் ஏற்கனவே படங்களில் நடித்து வருகிறார். பிரபல இந்தி நடிகர் நஸ்ருதின் ஷாவின் மகன் ஆவார்.
Tags:
Cinema
,
அக்ஷரா
,
கமல்ஹாசன்
,
காதலனுடன் ஜோடி சேரும் அக்ஷராஹாசன்
,
சினிமா