கேரள இறக்குமதியான மங்களகரமான மேனன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் நடந்தது. அவர் அங்கேயே தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
மாநில பேதம், மொழி பேதம் எதுவும் பார்க்காமல் கிராமத்து மக்கள் மேனன் நடிகையிடம் அன்பு காட்டியிருக்கிறார்கள். தினமும் ஒரு வீட்டுக்கு அழைத்து நடிகைக்கு விருந்து கொடுத்து இருக்கிறார்கள்.
அவர்களின் பாசமழையில் நனைந்த மேனன் நடிகை, நெகிழ்ந்து போனாராம். இதுபோல் ஒரு அன்பை எங்கும் கண்டதில்லை என்ற அவர், தனக்கு விருந்து கொடுத்தவர்களுடன், ‘செல்பி’ எடுத்துக்கொண்டாராம்!
Tags:
Cinema
,
சினிமா
,
மேனன்
,
வீடு வீடாக விருந்து