சிம்பு - அனிருத்தின் பீப் பாடலை கேட்குமாறு வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கு, மறுப்பு தெரிவித்துவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன்.
அனிருத்துடன் இணைந்து ஆபாசப் பாடல் பாடிவிட்டு, இப்போது கடும் எதிர்ப்பும் கைதாகும் சூழலும் உருவானதால் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சிம்பு.
இந்த மனுவை நீதிபதி ராஜேந்திரன் இன்று விசாரித்தார். அப்போது, சிம்புவுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன தமிழக அரசுத் தரப்பு மற்றும் மகளிர் அமைப்புகள். விசாரணையின் போது, அந்த பீப் பாடலை ஒருமுறை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், நீதிபதி ராஜேந்திரனோ அந்தப் பாடலை கேட்கவே தாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.ஆனால் பிற்பகலுக்குப் பிறகு, அவருக்கு அந்தப் பாடல் போட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகுதான் சிம்பு மற்றும் அனிருத்தைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று போலீசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
Tags:
அனிருத்
,
சிம்பு
,
சினிமா
,
பீப் பாடலைக் கேளுங்கள் கனம் கோர்ட்டார் அவர்களே