நம்ம ஆட்கள் சும்மாவே ஆடுவாங்க, இதுல காலில் சலங்கை கட்டிவிட்டால் என்ன ஆகும் என்று சொல்லவா வேணும்..
ஆனாலும் வேண்டுமென்றே சிலர் சர்ச்சையில் சிக்க ஏடாகூடமான விஷயங்களை செய்து அதன்பின் தலையை பிய்த்து கொண்டு அலைவதெல்லாம் நம் கண்ணெதிரே நடந்து கொண்டுதான் இருக்கிறது. நேற்று நடிகை சோனா அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மனோபாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து எனது செல்ல கணவர் (My Hubby Darling) என்று ஸ்டேடஸ் போட்டிருந்தார். இது உடனே பலருக்கு அதிர்ச்சியளித்தது.
என்னது நடிகை சோனா ரகசிய திருமணமா என்றெல்லாம் நினைக்க தோன்றியது. அதன்பின் விசாரித்ததில் “விருமாண்டியும் சிவனாண்டியும்” படத்தில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் அப்படத்தின் படப்பிடிப்பிலிருந்துதான் இந்த சேட்டையை அவர் செய்திருப்பது தெரிய வந்தது.
அதுமட்டுமா நேற்று சோனா விபத்தில் இறந்துவிட்டார் என்றும் வதந்திகள் பரவியது. அவர் நலமாகத்தான் உள்ளார். இப்படிபட்ட வதந்திகளை மனசாட்சியே இல்லாமல் எப்படி பரப்புகிறார்களோ....
Tags:
Cinema
,
சினிமா
,
சோனா
,
படப்பிடிப்பில் சோனா செய்த சேட்டை