கத்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த பிரபல லைக்கா நிறுவனம் தற்போது ரஜினியை வைத்து எந்திரன் 2.0 படத்தைஇந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டிலும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ எனும் லோ பட்ஜெட் படத்தையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கபோவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஜெகன் இயக்கத்தில் அக்சய் குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தையும் சிரஞ்சீவி நடிக்கும் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் லைக்கா தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினியை தொடர்ந்து ஜெயம்ரவி
,
விஜய்