பாஜிராவ் மஸ்தானி படத்துக்காக நடிகர் ரன்வீர் சிங் பல மாதங்களாக வளர்த்துவந்த முறுக்கு மீசையை நடிகையும் அவரது தோழியுமான தீபிகா படுகோனே நேற்று வெட்டி எறிந்தார். இந்த வீடியோவை நடிகர் ரன்வீர் சிங் டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
ரன்வீர் சிங்கின் மீசையை வெட்டியதும் தீபிகா படுகோனேவின் முகத்தில் அப்படியொரு ஆனந்தம். அவரது சிரிப்புக்காகவே இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரன்வீர் சிங்கும் தீபிகாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியாகிய பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் இந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
முறுக்கு மீசையை வெட்டி ஆனந்தத்தில் மிதந்த தீபிகா