கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, கடலூர் பகுதிகளில் பெய்த வரலாறு கனாத கனமழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் மூன்று கோடி மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்.
சில இடங்களுக்கு விஜய் நேரில் சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறி, அரிசி, பிஸ்கட், கோதுமை மாவு, பால் பாக்கெட் மற்றும் மளிகை பொருட்களை விஜய் வழங்கினார். வேட்டி, சேலை, போர்வைகள் போன்ற அத்தியாவசிய பாத்திரங்கள் ஆகியவை விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டன.
Tags:
3 கோடி மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவியை நடிகர் விஜய் வழங்கினார்
,
Cinema
,
சினிமா