கடந்த வாரம் தங்கமகன் மட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படமும் தமிழகத்தை கலக்கியது. இதோடு ரன்வீர் சிங் நடித்த பஜிரோ மஸ்தானி படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. தங்கமகன் 3 நாட்களில் ரூ 1.52 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
அதேபோல் தில்வாலே ரூ 52 லட்சமும், பஜிரோ மஸ்தானி ரூ 39 லட்சமும் வசூல் செய்துள்ளது. ஈட்டி 2 வாரத்தில் ரூ 1.35 கோடி வசூல் செய்ய, வேதாளம் வெளிவந்த 6 வாரத்தில் ரூ 6.62 கோடி வசூல் செய்து இன்னும் டாப் 5 பாக்ஸ் ஆபிஸில் உள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
தங்கமகன்
,
தில்வாலே
,
வேதாளம் பாக்ஸ் ஆபிஸ்