ஒரே நாளில் ஆண்ட்ரியா மற்றும் தமன்னாவுக்கும் பிறந்தநாள்.தமன்னாவுக்கு வயது 26. ஆண்ட்ரியா 30 வயதை எட்டிவிட்டார். இருவரும் ஒரே வருடத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர்கள் என்பதுதான் இதில் ஆச்சர்யம். பிறந்தது மட்டுமல்ல கலைப்பயணத்தையும் சேர்ந்தே துவங்கியுள்ளனர்.
தமன்னா, சண்ட் சா ரோஷன் செஹ்ரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். கேடி படம் மூலம் தமிழில் அறிமுகம். அதே பாணியில் ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சின்ன ரோல். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இன்னொரு நாயகி என சினிமாப் பயணம் இனிதே துவக்கம்.
காந்தக் குரலழகி ஆண்ட்ரியா எனில் தமன்னா நகை வடிவமைப்பாளர், தனக்கென தனி தளம் அமைத்துள்ளதோடு, தனக்கான நகைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் திறன் உடையவர். நடிப்பைத் தாண்டி ஆண்ட்ரியாவும் சரி தமன்னாவும் சரி நல்ல மாடல்களும் கூட. முக்கிய விஷயம் இருவரும் அவ்வளவும் தீவிரமாக டயட் மெயிண்டெயின் பேர்வழிகள்.
இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்த தடகா படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
Tags:
Cinema
,
ஆண்ட்ரியாவுக்கு 30
,
சினிமா
,
தமன்னாவுக்கு 26