சிம்பு- அனிருத் பாடிய பீப் பாடல் விவகாரம் தற்போது நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துகொண்டிருக்கிறது. பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு மற்றும் அனிருத் மீது தற்போது வழக்கு பதிவு செய்யபட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்புவின் ஆதரவாளர்கள் தற்போது கேள்விகள் எழுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு அவர் பர்சனல் விஷயத்துக்காக உருவாக்கியது பீப் பாடல். இதை சிம்புக்கு தெரியாமல் வேறு யாரோ திருட்டுதனமாக வெளியிட்டு உள்ளனர். மேலும் இது போன்ற பாடல்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லையா.
இதைவிட எத்தைனையோ மோசமான பாடல்கள், வசனங்கள் என பல வந்துள்ளது. ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஏன் பலர் சிம்புவை மட்டும் டார்கெட் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
மேலும் நடிகர் சிம்புவுக்கு ஆதரவாக மயிலாடுதுறையை சேர்ந்த பிரகாஷ் மற்றும் வேலூர் சேர்ந்த மதன் மற்றும் என இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
தீக்குளிக்க முயன்ற சிம்பு ரசிகர்