சிம்பு பாடி, அனிருத் இசையமைத்த பீப் பாடல் தான் தற்போதைய வைரல். இப்பாடலை பலரும் எதிர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று அந்த பாடல் போலவே இவர்களும் பேசி அர்ச்சனை செய்து வருகின்றனர்.
இதுக்குறித்து சிம்பு கூறுகையில் ‘நானும் அனிருத்தும் இதுப்போல் 150 பாடல்களை உருவாக்கியுள்ளோம், இதில் இந்த பாடலை யாரோ திருடி இணையத்தில் அப்லோட் செய்துள்ளார்கள்.முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதே இணையத்தில் தானே ஆபாச வீடியோக்களும் இருக்கிறது
தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.என் வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. அதேபோல் உங்கள் வீட்டில் நான் எட்டிப்பார்க்க மாட்டேன். மேலும், சில வருடங்களுக்கு முன் அன்பை பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன், அப்போதெல்லாம் நீங்கள் எங்கு போனீர்கள்’ என்று மிக கோபமாக பதில் அளித்துள்ளார்.
Tags:
Cinema
,
என் வீட்டின் படுக்கையறையில் செய்வதை நீங்கள் பார்க்காதீர்கள்
,
சினிமா