தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து மஜ்னு படத்தில் நடிக்கவுள்ளார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணனின் தயாரிப்பில் இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்குகின்றார்.
பிரேமம் படத்தில் சாய் பல்லவி ஏற்று நடித்த கதாபாத்திரத்தை ஸ்ருதிஹாசன் ஏற்றுள்ளார். சாய் பல்லவி மேக்கப் இல்லாமல் பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தாலும் ஆசிரியை மாணவனைக் காதலிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருந்த அவரது கதாபாத்திரத்திற்கு எதிர்ப்பும் எழுந்தது.
சாய் பல்லவி போல் தானும் மேக்கப் இல்லாமல் மஜ்னு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள ஸ்ருதிஹசான் இப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள துவங்கியுள்ளார்.
விசாகபட்டிணத்தில் நடைபெற்று வரும் மஜ்னு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
ஸ்ருதிஹாசன் சேலையில் தோன்றும் இப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்தும் வருகின்றனர். பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆயிஷாவும் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர்.
Tags:
Cinema
,
இணையத்தில் வெளியான ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள்
,
சினிமா