பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணையில், அந்தப் பாடலை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி பாடலை கேட்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
பீப் பாடல் குறித்த அரசின் விளக்கத்தை கேட்கவும், மனுதாரர் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத்தினரின் வாதத்தை கேட்கவும் ஏதுவாக வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்) பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
நீதிபதி