நடிகை ஷாமிலி மலையாள படத்தில் நடிக்க எக்கச்சக்க சம்பளம் கேட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தயாரிப்பாளர் பைசல் லதீப் தெரிவித்துள்ளார். நடிகை ஷாமிலி தற்போது தமிழில் வீர சிவாஜி உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ஷாலினிக்கு ஜோடியாக நடித்த குஞ்சக்கோ போபன் ஜோடியாக வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ஷாமிலியைப் பற்றி ஒரு செய்தி வெளியானது.
மலையாள படத்தில் நடிக்க ஷாமிலி எக்கச்சக்க சம்பளம் கேட்டு அடம் பிடித்ததாக மலையாள செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. ஷாமிலி அதிக சம்பளம் எல்லாம் கேட்கவில்லை.
அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர், சம்பளத்திற்கு அல்ல என்று படத்தின் தயாரிப்பாளரான பைசல் லதீப் தெரிவித்துள்ளார். படக்குழுவினருக்கு ஆதரவு அளிப்பவர் ஷாமிலி. அப்படிப்பட்டவர் பற்றி பொய்யான செய்தி வெளியாகியுள்ளது வருத்தமாக உள்ளது என்கிறார் பைசல்.
உயிருடன் இருக்கும் நடிகர்களையே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட மலையாள செய்தி இணையதளங்கள் ஷாமிலியை பற்றி அப்படி செய்தி வெளியிட்டதில் ஆச்சரியம் இல்லை என்று பைசல் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஜீத்
,
அஜீத் மச்சினியின் அட்டகாசம்
,
சினிமா
,
ஷாமிலி