இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் உலக லோக்க தர டிக்கெட் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பாடல் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக லோக்கல் தரடிக்கெட் பாடல் 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' என்று தொடங்குவதாகவும் இந்த 'தெறி' பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளதாகவும், இந்த பாடலை 'தங்கமாரி ஊதாரி' பாடல் புகழ் ரோகேஷ் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த பாடலுக்கு விஜய் தாறுமாறாக டான்ஸ் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதாகவும், 40 வினாடிகள் அடங்கிய இந்த பாடலின் வீடியோ ஒன்று விரைவில் இணையதளங்களில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:
'தெறி'யின் உலக லோக்கல் தரடிக்கெட் பாடல்
,
Cinema
,
சினிமா
,
தெறி
,
விஜய்