தன் நண்பனின் பிறந்தநாளில் விஜய் சேதுபதியின் குத்தாட்டம்..!!
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தர்மதுரை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் ஆடிப்பாடும் ஒரு பாடல் காட்சியினை படப்பிடிப்புக்காக பறை இசை கலைஞர்கள் எல்லாம் வந்திருந்தனர். இந்நிலையில் நேற்று, இப்படத்தில் நடிக்கும் நடிகர் அருள்தாஸின் பிறந்தநாள், எனவே அவர் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர்.
அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறை இசை கலைஞர்கள் பறையை அடிக்க அதற்குத் தகுந்தாற்போல் விஜயசேதுபதியும், பிறந்தநாள் கொண்டாடிய அருள்தாஸ் மற்றும் படப்பிடிப்பில் பங்குபெற்ற பலரும் ஆடத்தொடங்கிவிட்டார்கள்.