தெலுங்கு சினிமாவின் பிரபல எழுத்தாளரான சத்யமூர்த்தி இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை.
61 வயதான இவர் பாடலாசிரியராக சினிமாவில் அறிமுகமாகி பின் கதாசிரியராக இருந்து வந்தார். இவர் கிலாடி No 786, பேடடரயடு, சத்ருவு, போலீஸ் லாக்கப், அப்ஹிலாஷா போன்ற பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவரின் இறுதி ஊர்வலம் இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது.
Tags:
Cinema
,
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை மரணம்
,
சினிமா