அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் கோவா படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது கிளைமாக்ஸின் ஒரு பகுதியை சென்னையில் உள்ள ஒமேகா தொழிற்சாலையில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் விஜய் சுமார் 50 வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களுடன் நடித்து வருகிறார். மேலும் ஒரு காட்சியில் கிரேனில் தொங்கியபடி அதிகப்படியான ரிஸ்க் எடுத்து விஜய் நடித்துள்ளாராம். இந்த காட்சிக்கு டூப் போடலாம் என இயக்குனர் கூறியபோதும், விஜய் அதற்கு மறுத்து நானே நடிக்கின்றேன் என்று கூறி நடித்துள்ளாராம்.
விஜய் நடித்த இந்த சண்டைக்காட்சியை கிரேன், ஜிம்மி ஜிப்பி போன்ற கருவிகளின் உதவியோடு 6 கேமராக்களினால் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை காட்சி நிச்சயம் படம் வெளிவந்தவுடன் பரபரப்புடன் பேசப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி கிளைமாக்ஸ். அட்லிக்கு மறுப்பு சொன்ன விஜய்
,
விஜய்