அஜித்தின் மச்சினியும் முன்னால் நடிகை ஷாலினியின் தங்கையுமான ஷாம்லி தற்போது கொடி, வீர சிவாஜி போன்ற பல தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜித்துடனான போட்டோ ஷூட் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் அனுபவம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் எங்கு சென்றாலும் அஜித்தின் ரசிகர்கள் தன்னை சூழ்ந்து கொண்டு தன்னை மரியாதையுடன் நலம் விசாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விக்ரம் பிரபுவுடன் இவர் நடித்துவரும் வீர சிவாஜி படத்தில் இவர் தீவிர விஜய் ரசிகராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அஜித்துடனான போட்டோ ஷூட் மறக்கமுடியாதது ஷாம்லி
,
சினிமா