இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதை அடுத்து தற்போது இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விஜய்யின் படங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலும் பெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலை தரும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கர்நாடக மாநில 'தெறி' படத்தின் ரிலீஸ் உரிமையை கோல்டி பிலிம்ஸ் (Goldie) நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிறுவனம்தான் விஜய்யின் 'கத்தி' படத்தை கர்நாடகத்தில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களின் வியாபாரம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறியாக தொடங்கிய 'தெறி' வியாபாரம்
,
விஜய்