இந்த அட்வான்ஸ் புக்கிங் வந்தாலும் வந்தது! நாளைய பசிக்கு இன்றைக்கே பொட்டலம் ரெடி! அதுவும் நாளைக்கும் சூடாக இருப்பதைப் போல!!
அப்படிதான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ஒரே ஒரு ஸாரி. அதையும் தாண்டிய விசேஷம் இது. தமிழ்சினிமா வரலாற்றில் சாதனை என்கிறது சினிமாவுலகம். வெளிப்படையாக எந்த தியேட்டர் என்று சொன்னால், கலெக்டரோ, வணிக வரி ஆணையரோ உள்ளே புகுந்து சம்பந்தப்பட்டவர்களின் சொக்காயை கழற்றக் கூடும் என்பதால், அடக்கி வாசிப்போம். இருந்தாலும் ஏரியாவை மட்டும் சொல்லிவிடுகிறோம்.
திருநெல்வேலியிலிருக்கும் ஸ்பெஷல் தியேட்டர் ஒன்று. நாளைக்கு ஆறு ஷோ ஓட்டுகிறதாம். எல்லா ஷோவுக்குமே முன் கூட்டியே டிக்கெட் விற்பனை முடிந்தது. அதுவும் 14 லட்சம் வசூல். ரஜினி, கமல், விஜய் படங்கள் வெளிவந்த நேரத்தில் கூட இப்படி ஒரே நாளில் 14 லட்சம் வசூல் நடந்ததில்லை. அதுவும் ஒரே நாளில் ஒரே ஒரு தியேட்டரில் நடந்ததில்லை என்கிறது வரலாறு.
வேதாளம் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினாலும், அல்வாவுக்குள் அழுத்தம் திருத்தமாக ஒரு முந்திரி கிடந்து பல்லை நசுக்கிய மாதிரி நெருடல்தான். பட்…?
இந்த வசூலையும், ஆர்வத்தையும் பாராட்டிதானே ஆகணும்.
Tags:
Cinema
,
சினிமா
,
வேதாளம் நிகழ்த்திய சாதனை
,
வேதாளம் வசூல்.தமிழ் சினிமா