சுட்ட கதையா இருந்தாலும் அதை பக்கா கதையாக கொடுப்பதில் சிறந்தவர் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்தவர் இயக்குநர் அட்லீ. தற்போது இவர் விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தில் முதல் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இதுநாள்வரை தலைப்பை அறிவிக்காமல் இருந்த அட்லீ. தற்போது தெறி என்று அறிவித்திருப்பதால் இந்த தலைப்பும் ஏற்கனவே சதீஷ்குமார் என்ற இயக்குநர் அவரின் படத்துக்கு தெறி என்ற தலைப்பைத்தான் வைத்திருக்கிறார்.
இதை அவரது பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காவல், கபாலி போன்ற தலைப்பிற்கும் இதேமாதிரி ஒரு இயக்குநர்களால் சர்ச்சை எழுந்தது அனைவரும் தெரிந்திருக்கும்.
Tags:
Cinema
,
அட்லீ
,
சினிமா
,
டைட்டிலை கூட விட்டு வைக்க மாட்டாரா இந்த அட்லீ