தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளை, கதாநாயகர்களுடன் இணைத்து பல்வேறு காதல் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியான ஓவியாவிடம், அவருக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு,
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த பத்துக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் என்னிடம் தங்கள் காதலை சொல்லியுள்ளனர். நான் அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை. இதுவரை யாரையும் காதலிக்கும் எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை என்றார்.
மேலும் அவர் கூறும்போது, தற்போது ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘144’ படத்தில் நடித்து வருகிறேன். இரண்டு படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
Tags:
Cinema
,
ஓவியா
,
சினிமா
,
பத்து பேர் என்னை காதலித்தனர்
,
ஹலோ நான் பேய் பேசுறேன்