விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிய நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் இயக்குனர் அட்லி, விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தகவல் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் விஜய் ஒரு கண்ணால் பார்ப்பது போன்றும், விஜய்யின் காது எதையோ கேட்பது போன்றும், விஜய் வாயை ஒரு கை மூடுவது போன்றும், அமைந்துள்ளது. இதிலிருந்து அட்லி கூற நினைப்பது, ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், வாயால் பேசுவதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பதே ஆகும்.
விஜய்யின் ‘தெறி’ பட போஸ்டரில் மறைந்துள்ள இந்த கருத்து தற்போது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
Tags:
‘தெறி’ ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்துள்ள தகவல்
,
Cinema
,
சினிமா
,
விஜய்