பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் “இது நம்ம ஆளு”. இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்புவின் சகோதரன் குரளரசன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பட இயக்குநர் பாண்டிராஜுக்கும், தயாரிப்பாளரான டி.ராஜேந்தருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் வெளியாவதில் குழப்பம் நீடித்துவந்தது. இறுதியில் இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்பொழுது இப்படத்தின் தமிழக உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பொங்கல் அன்று கதகளி மற்றும் அரண்மனை2 படத்தை ரிலீஸ் செய்வதால், காதலர் தினத்தன்று இதுநம்ம ஆளு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
கிருஸ்துமஸ் அன்று பசங்க 2, பொங்கல் அன்று கதகளி, காதலர் தினத்தன்று இதுநம்ம ஆளு என்று வரிசையாக பண்டிகை நாட்களில் தன் படம் வெளியாவதால் டிரிபிள் சந்தோஷத்தில் இருக்கிறாராம் பாண்டிராஜ்.
Tags:
Cinema
,
காதலர் தினத்தில் வெளியாகும் சிம்பு படம்
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா