ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே,தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.
அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து தனது 3 வது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கி வருகிறார் ரஞ்சித்.
இதைத் தொடர்ந்து மலேசியா மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் பாங்காக் சென்று படப்பிடிப்பை நடத்திய படக்குழுவினர் அடுத்ததாக கோவா செல்ல திட்டமிட்டு
இருக்கின்றனர்.
இந்நிலையில் மலேசியாவில் படம்பிடிக்கப்பட்ட இப்படத்தின் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 நிமிடங்கள் ஓடும் இப்பாடல் 'வட்ஸ்எப்' மூலமாக பகிரப்பட்டு வருகிறது.
இதனைக் கேள்விப்பட்ட கபாலி படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இதனால் கபாலி படத்தின் படப்பிடிப்பானது இனிமேல் பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் என்று தெரிகிறது. இதே போல விஜய்யின் புலி மற்றும் அஜீத்தின் வேதாளம் ஆகிய படங்களின் காட்சிகளும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
இணையத்தில் வெளியான கபாலி
,
கபாலி
,
சினிமா
,
ரஜினிகாந்த்