சென்னையில் கடந்த வாரமாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தீவிரம் காட்டிய கன மழை சென்னையையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த மழை சினிமா உலகையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
பெரும்பாலான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கான நேரத்தில் டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்தது. அடை மழையை பொருட்படுத்தாமலும், இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்துள்ளனர்.
இந்த மழையில் விஜய் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர். இந்த சண்டைக் காட்சியை மாஸ்டர் திலீப் சுப்பராயன் படமாக்கினார். நேற்றோடு இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரபு, பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
Tags:
Cinema
,
Vijay59 Fight Scene Shooting
,
Vijay59 film
,
Vijay59 Shooting Spot
,
சினிமா
,
விஜய் படப்பிடிப்பு