சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மலேசியாவில் கபாலி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். தீபாவளிக்கு கூட அவர் சென்னை வருவது சந்தேகம் என்கிறார்கள்.
ரஜினி சென்னை வரவில்லை என்றால் அவரது குடும்பத்தினர் ரஜினியுடன் தீபாவளி கொண்டாட மலேசியா செல்ல இருக்கிறார்கள். தொடர்ந்து அங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி வருகிற 26ந் தேதி அமெரிக்க செல்கிறார்.
மலேசியாவிலிருந்து நியூயார்கிற்கும், அங்கிருந்து மலேசியாவிற்கும் அவருக்கு விமான டிக்ககெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் 4 நாட்கள் தங்குகிறார். அப்போது இயக்குனர் ஷங்கருடன் அவர் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை சந்திக்கிறார். சந்திப்பின்போது எந்திரன் இரண்டாம் பாகத்தில் அர்னால்ட் நடிப்பது பற்றியும், அவரது கேரக்டர் பற்றியும், எத்தனை நாள் கால்ஷீட், எவ்வளவு சம்பளம் என்பது பற்றியும் முடிவு செய்கிறார்கள். தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரிகளும் உடன் இருந்து இந்த சந்திப்பு ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
அதன் பிறகு ரஜினி, எந்திரன் இரண்டாம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடக்க உள்ள ஸ்டூடியோக்களை பார்வையிடுகிறார். அப்போது முன் தயாரிப்புக்காக ஒரு ஸ்டூடியோவில் பிரமாண்ட போட்டோ ஷூட்டும் நடக்கிறது. இவை அனைத்தையும் முடித்து விட்டு டிசம்பர் 1ம் தேதி மலேசியா திரும்பும் ரஜினி, மீண்டும் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜனி இல்லாத 4 நாட்களும் ரஜினி இல்லாத காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்படுகிறது.
Tags:
Cinema
,
Rajini goes to America
,
அமெரிக்கா செல்லும் ரஜினி
,
சினிமா