பிரான்ஸ் மக்களை நிம்மதியாக வாழ விட மாட்டோம் : தீவிரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் நிகழ்ந்து 153 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்படும் Al-Hayat என்ற செய்தி நிறுவனம் ஒன்று சில மணி நேரங்களுக்கு முன்னர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், நீண்ட தாடி வைத்துள்ள தீவிரவாதி ஒருவன் தன்னுடைய சக தீவிரவாதிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறான்.
அப்போது பேசிய அவன், ”தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துங்கள். பிரான்ஸ் மக்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ கூடாது. சாதாரண பொதுமக்கள் வீதிகளில் பொருட்களை வாங்க செல்வதற்கு கூட அச்சப்பட வேண்டும்” என பேசியுள்ளான்.
மேலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து சிரியாவிற்கு பயணம் மேற்கொள்ள முடியாத இஸ்லாமியர்களை பிரான்ஸ் நாட்டில் பயங்கர தாக்குதல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளான்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய வீடியோ காட்சிகள், பிரான்ஸ் நாட்டில் மேலும் தாக்குதலை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், தற்போது வெளியாகியுள்ள வீடியோ எப்போது படமாக்கப்பட்டது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Paris Attacks : Police Raid Property in Belgium 'linked to Isis assault' – live