நயன்தாரா, சிம்பு கடைசி கடைசியாக ஜோடியாக நடித்துள்ள `இது நம்ம ஆளு` பட புரமோஷன்களுக்கு நயன் தாரா வரமாட்டார். அவரை நிர்பந்தித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று நயனின் முன்னாள் காதலர் சிம்புவுக்கு அவரது இன்னாள் காதலர் விக்னேஷ் சிவன் என்கிற விக்டர் எச்சரித்திருப்பதாக இயக்குநர் பாண்டியராஜன் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
புரமோஷனுக்கு கூப்பிடுகிற சாக்கில் பழைய நட்பைப் புதுப்பிக்க சிம்பு முயலக்கூடும் என்கிற பயமே விக்டரின் இந்த கறார் கண்டிசனுக்கு காரணம் என்று நம்பப்படுகிறது. அப்படி வராத பட்சத்தில் வம்புத்தம்பி சிம்பு படத்தின் பப்ளிசிட்டிக்காக நயனை எப்படிப்பட்ட வம்பிலும் மாட்டிவைக்கத்தயங்கமாட்டார் என்பது இண்டஸ்ட்ரிக்கு நன்றாகவே தெரியும்.
ஏற்கனவே இதே இது நம்ம ஆளு படத்துக்கு சுருக்கமாக `ஐஎன்ஏ` என்று வைத்திருப்பதை நீக்கும்படி இண்டியன் நேஷனல் ஆர்மி [`ஐஎன்ஏ`] சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளர்கள் கொந்தளித்து வருவதாகவும் ஒரு தகவல் நிலவுகிறது.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
நயன்தாரா
,
நயன்தாராவை இனி கனவுல கூட நினைக்கக்கூடாது