நடிகை அனுஷ்கா தொடையை பார்த்த பிறகு நான் அதற்கு பெரும் ரசிகராகவே மாறிவிட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார் தெலுங்கு காமெடி நடிகர் ஆலி.
ஆர்யா, அனுஷ்கா நடித்த, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘சைஸ் ஜீரோ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின்போது இவ்வாறு ஆலி பேசியுள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளினி, சுமா, மற்றொரு ஹீரோயினான சோனான் சவுகான் தொடையழகி என வர்ணித்தபோது குறுக்கிட்ட, ஆலி, “அனுஷ்காவை வைத்துக்கொண்டே தொடை அழகு பற்றி தயவு செய்து பேசாதீர்கள். நான் பில்லா (தெலுங்கு) திரைப்படத்தில் அனுஷ்காவின் தொடையை பார்த்தது முதல், அவரின் தொடைக்கு பெரும் ரசிகராகிவிட்டேன்.
சோனல் சவுகானுக்கு தொடையே (சதை) கிடையாது. அனுஷ்காவின் தொடையை பாருங்கள். அவை மிகவும் அழகானவை. கவர்ச்சிகரமானவை. உங்களுக்கு சந்தேகமிருந்தால், இயக்குநர் ராகவேந்திர ராவிடம் கேட்டுக்கொள்ளுங்கள், ஏனெனில், தொடையழகை காட்டுவதில் ராகவேந்திரராவ், சிறந்த இயக்குநர்.
ராகவேந்திரராவ் தனது திரைப்படத்தில், ஒரு சிறு தொடையை கூட காட்டாமல் விடமாட்டார். அவர் ஒரு தொடை கலா ரசிகர். இவ்வாறு ஆலி பேசினார். இதைக்கேட்டு அரங்கத்தில் இருந்தோரில் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அனுஷ்கா உள்ளிட்ட பெரும்பாலானோர் விழுந்து, விழுந்து சிரித்தனர்.
Tags:
அனுஷ்கா தொடைகளை பார்த்து ரசிகனாகிவிட்டேன்
,
காமெடி நடிகர்
,
சினிமா