தமிழ்பட கதாநாயகிகள் சிலர் சம்பளத்தில் ஒரு பகுதியை சமூக சேவை பணிகளுக்கு செலவிடுகிறார்கள். பிறந்த நாள் விழாக்களை ஆதரவற்றோர் இல்லங்களில் நடத்தி நிதி உதவியும் வழங்குகிறார்கள். ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதுவரை 30 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கான தங்குமிடம், படிப்பு செலவு, உணவு போன்றவற்றை கவனித்து கொள்கிறார். நடிகை நமீதா சொந்த செலவில் காசிமேடு பகுதியில் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தார். நடிகை சினேகா உடல்தானம் செய்துள்ளார். நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார்.
தெருநாய்களை பிடித்து பராமரித்து, தத்து கொடுத்து வருகிறார். நடிகை சமந்தா உடல்தானம் செய்ததோடு 70 ஏழை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்யப்போவதாக அறிவித்தார். இதற்காக, பிரதியூஷா என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு மூலம் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யும் பணி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் நேற்று தொடங்கியது. ஒரு வாரம் தொடர்ந்து குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
இருதய குழாயில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளை அடைத்தும், இருதய ரத்த நாள அடைப்புகளை நீக்கியும் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இங்கிலாந்தில் இருந்து வந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இந்த சிகிச்சையை அளிக்கிறார்கள். இருதய அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட குழந்தைகளை சமந்தா நேரில் சந்தித்து ஒருநாள் முழுவதையும் அவர்களுடன் செலவிடுகிறார்.
Tags:
Cinema
,
இருதய அறுவை சிகிச்சைக்கு சமந்தா உதவி
,
சமந்தா
,
சினிமா