நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மாபெரும் வெற்றியை ருசித்தது. இதன்மூலம் கார்த்தி, நடிகர் சங்கத்தின் புதிய பொருளாளராக பதவி ஏற்றுள்ளார். எனினும் இதுகுறித்து கார்த்தியின் அண்ணனும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான சூர்யா இதுவரை வாய்திறக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக நடிகர் சூர்யா நடந்துமுடிந்த தேர்தல் குறித்து மனம்திறந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள், ஒற்றுமைக்கு வித்திடுங்கள் போன்ற அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை இங்கே:
Tags:
Cinema
,
சினிமா
,
நடிகர் சங்க தேர்தல்
,
மனம்திறந்த சூர்யா