பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதற்கான பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன.
இதை சென்னையில் நடத்துகிறார்கள். அப்போது மெட்ரோ ரெயிலிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்து வெளிநாடுகளிலும் இந்த பாடல் காட்சியின் ஒரு பகுதியை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அறிமுக பாடல் காட்சியாக அமைய உள்ளது. ரூ.2 கோடி வரை செலவு செய்து இந்த பாடல் காட்சியை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். ராஜூ சுந்தரம் நடன காட்சிகளை அமைக்கிறார்.
இந்த பாடல் காட்சியில் கம்ப்யூட்டர் கிராபிக்சும் இடம் பெறுகிறது. பாலிவுட் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்ற உள்ளனர். சிவகார்த்திகேயன் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அதில் இந்த பாடல் காட்சி பிரமாண்டமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
Tags: ரஜினி முருகன் , ரஜினி முருகன் விமர்சனம் , ரஜினி முருகன் ரிலீஸ் தேதி , Rajini Murugan Review , Rajini Murugan Movie Online , Rajini Murugan Movie Release Date , Rajini Murugan Movie Download , Rajini Murugan Movie Online TamilGun , ரஜினி முருகன் திரை விமர்சனம் , Rajini Murugan Movie
Tags:
Cinema
,
Keerthi Suresh
,
Keerthy Suresh 360•
,
Sivakarthikeyan
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா