ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள ‘எந்திரன் 2’ படத்தை 3டி கேமரா மூலமாகப் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கபாலி படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படம், எந்திரன் 2. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஆரம்பமாகிறது.
ஏமி ஜாக்ஸன் கதாநாயகி நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. வில்லன் வேடத்துக்கு அர்னால்ட்-டிசம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர். இதுவரை படத்தில் நடிப்பவர்கள் குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
'எந்திரன் 2' படம் முழுவதும் 3டி கேமராவில் படமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் 3டி கேமராவில் படமாக்கப்படும் முதல் படம் 'எந்திரன் 2' என்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் உள்ள சில காட்சிகளை மோசன் கேப்சர் (Motion Capture) தொழில்நுட்பத்தின் உதவியுடன் படமாக்க உள்ளார்.
ஒளிப்பதிவாளர், நீரவ் ஷா. கோச்சடையான், அவதார் போன்ற படங்கள் மோசன் கேப்சர் வகை தொழில்நுட்பத்துடன் படமாக்கப்பட்டவை. மோசன் கேப்சர் தொடர்பான காட்சிகள் ஹாலிவுட் ஸ்டூடியோவில் படமாக்கப்பட உள்ளன.
எந்திரன் 2 படத்துக்குப் பிறகு எந்திரன் 3 படத்தை இயக்கவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
Tags:
3டி-யில் உருவாகும் ரஜினி ரஜினி
,
Cinema
,
எந்திரன்
,
சினிமா