கிட்டத்தட்ட அங்காடித் தெரு ரேஞ்சுக்கு அஞ்சலியின் பெர்சனல் வாழ்க்கை அவரது சித்தியால் சந்தி சிரித்து விட்டது. அதிலும் கூட அவருக்கு நல்ல விஷயங்கள் தான் நடந்திருக்கிறது என்கிறார்கள்.
பிரச்சனையான போது ஆந்திராவுக்கு ஓடிப்போய் அப்படியே ஒரு கட்டத்தில் மாயமானவர் திடீரென்று மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஜெயம்ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ரீ-எண்ட்ரியான அஞ்சலி மீண்டும் தமிழில் பிஸியாகியிருக்கிறார். படப்பிடிப்புக்கு சரியாக நேரத்தில் வந்து எந்த குடைச்சலும் கொடுக்கவில்லை என்றாலும் சமீபகாலமாக அடிக்கடி அமெரிக்கா பறக்கிறாராம்.
ஏன் இந்த திடீர் விசிட் என்று விசாரித்தால் அவருக்கு ஏற்கனவே ஒரு பெரிய தொழிலதிபர் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இன்னொன்று உடல் ரீதியாக அவருக்கு ஏதோ ரகசிய சிகிச்சை நடக்கிறது என்கிறார்கள்.
இதுபோன்ற செய்திகள் கசிய கசிய அஞ்சலியின் கண்களில் இருந்து கண்ணீரும் கசிகிறது. நான் என்ன செய்தாலும் அதற்கு கண் காது மூக்கு வைத்தேல்லாம் எழுதுறீங்களே? உங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சி இல்லையா என்கின்ற அளவுக்கு கோபப்பட ஆரம்பித்திருக்கிறார்.
அதுக்காக அமெரிக்கா விசிட் ஏன் என்று அவரால் சொல்லிவிடவும் முடியாது. அதுபற்றி இவர்களால் எழுதாமலும் இருக்க முடியாது. தேவுடா தேவுடா…
Tags:
Cinema
,
சினிமா
,
மீண்டும்
,
மீண்டும் தமிழில் அஞ்சலி