தமிழ்த்திரையுலகே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் "புலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வரவிருக்கும் "விஜய்59" என்ற புதிய படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் இளையதளபதி விஜய்.
'தல' அஜித் வழியை பின்பற்றி பெயர் தீர்மானிக்கப்படாமல் ஆரம்பிக்கபட்ட இந்தப்படத்தின் பூஜை 'கேரளஹவுஸ்' இல் நடைபெற்றபோது, ரசிகர்கள் முதல் திரைத்துறையினர்வரை படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற ஆவலில், படத்தின் பெயருக்காக காத்திருந்தனர். இருந்தும் பெயர் வெளியிடப்படாமலேயே "விஜய்59" படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இந்தநிலையில், ரகசியம் காக்கப்பட்ட இந்தப்படத்தின் பெயர் எப்படியோ வெளியே கசிந்துள்ளதாம்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, விஜய்யுடன் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஜோடி சேரும் இந்தப்படத்தில், மாறுபட்ட வித்தியாசமான ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கிறார் மூத்த பெரும் இயக்குனர் மகேந்திரன்.
இது இப்படியிருக்க, வளர்ந்துகொண்டிருக்கும் "விஜய்59" திரைப்படத்திற்கு ரசிகர்களாலும், திரைத்துரையினராலும் பல்வேறுபட்ட தலைப்புக்கள் ஊகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டு வந்தநிலையில், தற்போது வெளியே கசிந்துள்ள புதிய தலைப்பு படக்குழுவினரால் நிச்சயப்படுத்த பெயர் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.
இவ்வாறு வெளியாகியுள்ள தலைப்பு எதுவென்றால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட் அடித்த "மூன்று முகம்" என்பதே அது.
Tags:
Cinema
,
Vijay59 film
,
சினிமா