அஜித்தின் மச்சினி ஷாம்லி தனது சிறுவயதிலேயே ‘அஞ்சலி’ படத்தில் நடித்து தேசியவிருது பெற்றவர். இவர் தற்போது தமிழில் தனுஷ், விக்ரம் பிரபு படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஷாமிலிக்கு அஜித்தே போட்டோஷூட் நடத்தினார்.
இந்நிலையில் ஷாம்லி நடிக்க வருவதில் அஜித்துக்கு விருப்பமில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஷாம்லி டெக்னீஷ்யன் அல்லது இயக்குனர் துறையை தேர்வு செய்ய அஜித் அறிவுரை கூறியதாகவும் ஆனால் சிறுவயதில் இருந்து நடித்தே பழக்கம் கொண்ட ஷாம்லி, அஜித்தின் விருப்பத்திற்கு எதிராக நடிகையாகவே தொடர முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் ஷாலினியும் அஜித்துக்கு எதிராகவும் ஷாமிலிக்கு ஆதரவாகவும் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. ஷாமிலிக்கு நடிப்பு தவிர வேறு எந்த துறையிலும் விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஷாலினி, தனது தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா