கும்கியில் கணுக்கால் கவர்ச்சியை கூட காட்டமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த லட்சுமிமேனன், விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்க வைத்து விட்டனர்.
அதனால் அந்த சம்பவத்திற்கு பிறகு லட்சுமிமேனனின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதையும், காட்சிகளும்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப என்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடிக்கிறேன் என்று ஓப்பனாக சொல்லிவிட்டார்.
அதேசமயம், கெளதம் கார்த்தியுடன் அவர் நடித்த சிப்பாய் படம் வெளிவராமல் இருப்பதை அடுத்து, இனிமேல் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற ஒரு புதிய கண்டிசன் போட்டுவிட்டார் லட்சுமிமேனன்.
அதனால் வளர்ந்த நடிகர்களுடன் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார். அதன்காரணமாக, கொம்பனுக்குப் பிறகு அஜித்தின் தங்கையாக நடிப்பவர், ஜெயம்ரவி நடிக்கும் மிருதன் படத்திலும் நடித்து வருகிறார் லட்சுமிமேனன்.
இந்த படங்களில் நெருக்கமான காட்சிகள் என்று வருகிறபோது, டைரக்டர்களின் விருப்பம்தான் லட்சமிமேனனின் முடிவாக இருக்கிறதாம். இதனால் சமீபகாலமாக டைரக்டர்களின் நடிகையாக மாறிக்கொண்டு வருகிறார் லட்சுமிமேனன்.
Tags:
Cinema
,
lakshmi menon
,
சினிமா