ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்கில் பட்டையை கிளப்பும் படம் தனி ஒருவன். இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய இப்படக்குழு, இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
இதில் பேசிய இயக்குனர் ராஜா ‘அனைவரும் என்னை ரீமேக்ஸ் ராஜா என்று தான் அழைப்பார்கள், மேலும், என்னிடம் வரும் நடிகர்களும் ரீமேக் படங்கள் என்றால் நடிக்கிறேன் என்பார்கள்,
இதை தனி ஒருவன் உடைத்து எறிந்து விட்டது.’என கூறினார்,இப்படி பேசும் போதே மேடையில் ராஜா கண்ணீர் விட, ஜெயம் ரவி திடிரென்று உணர்ச்சிவசப்பட்டு அவரும் அண்ணனை கண்டு கண்ணீர் விட்டார். உண்மையான உழைப்பிற்கு என்றும் வெற்றி தான்.
Tags:
Cinema
,
Jayam-Ravi-tears
,
சினிமா