‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பெரிய காரணங்களாக சொல்லப்படுபவை அப்படத்தின் காட்சி அமைப்புகளே. படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை ஒவ்வொன்றும் பாராட்டுப்படியாக இருந்தது. அதுவும் படத்தின் ஆரம்பகாட்சிகளில் பிரபாஸ் மலையேறி உச்சிக்கு செல்ல முயற்சிப்பதும், பின்னர் இறுதியாக மலையேறி நாயகி தமன்னாவை சந்திப்பதும் என மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கியிருந்தார் ராஜமௌலி.
இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தின் இந்த காட்சிகளே இளைஞர் ஒருவரின் உயிரை பலி வாங்கியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த ஷபீர் என்ற 24 வயதுடைய வாலிபர் நண்பர்களுடன் விடுமுறைக்காக அருவி உள்ள இடங்களுக்கு சென்றுள்ளார். அப்போது அருவியைப் பார்த்த அவர் ‘பாகுபலி’யின் காட்சியில் வருவதுபோல மலையேற முயற்சித்துள்ளார். நண்பர்கள் தடுத்தும் அவர் விடுவதாக இல்லை.
மேலும் மலையில் ஏறி குதிக்க முயற்சித்தும் உள்ளார். இறுதியில் கால் தவறி அருவி பாறையில் சறுக்கி விழுந்துள்ளார். பின்னர் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
இன்றைய காலத்தில் சினிமாவிற்காக படமாக்கப்படும் காட்சிகளை படம் முடியும் தருவாயிலும், இணையதளங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். பெரும்பாலான ரிஸ்க்கான காட்சிகள் கீரின்மேட் முறையிலும் டூப் கலைஞர்களை கொண்டும் படமாக்கி வருகின்றனர். மேலும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் அதை உருவாக்கி வருகின்றனர். இப்படியாக இருந்தபோதிலும் சினிமாவை கண்டு இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது வருத்தத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது.
Tags:
Bahubali rajamouli
,
Bahubali water falls
,
Cinema
,
young boy died because of Bahubali movie
,
Youth dies
,
அனுஷ்கா
,
சினிமா