சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவிருக்கிறது. முதலில் மலேசியாவில் தொடங்கவிருந்த படப்பிடிப்பை தற்போது சென்னையில் துவங்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மலேசியா செல்லவிருக்கின்றனர். தற்போது சென்னை EVP மற்றும் ஆதித்யா ராம் ஸ்டூடியோ ஆகிய இரண்டு இடங்களிலும் இதற்கான பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இவைமட்டுமில்லாமல் மலேசியாவில் எடுக்கவிருக்கும் ஒரு சில காட்சிகளை இங்கேயே செட் போட்டு படமாக்க இருக்கின்றனர். மேலும் ரஜினி ஓய்வு எடுப்பதற்கு ஸ்பெஷலான ஒரு அறையை உருவாக்கி வருகின்றனர். ரஜினி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு சென்று வரமுடியாது என்பதால் இந்த ஏற்பாடாம்.
மேலும் சமீபத்தில் நடந்த போட்டோ ஷுட்டில் ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சியளித்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவியது.
இந்நிலையில் இப்படத்தில் உள்ள இன்னொரு கேரக்டரான ரஜினி போலீஸ் வேடத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. காரணம் மலேசிய போலீஸ் அதிகாரி போன்றும் ரஜினியை புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. படம் முழுக்க அந்த கேரக்டரில் வருகிறாரா? என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இதுவரை ஒரு டான், ஒரு போலீஸ் என்பது தெரியவந்துள்ளது.
Tags:
Cinema
,
Rajini as Don in Kabali
,
Rajini as Malaysia Police in Kabali
,
Superstar Rajinikanth
,
கபாலி
,
சூப்பர்ஸ்டார்