விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள’. இப்படம் சென்னை முதல் நேபாள் வரை 60 வெவ்வேறு இடங்களில் படமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் இப்படத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இணையத்தள ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் இப்படத்தில் லாடம் புகழ் சார்மி ஒரேயொரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
Tags:
10 Endrathukulla
,
10 எண்றதுக்குள்ள திரை விமர்சனம்
,
Chiyaan Vikram
,
Cinema
,
D Imman
,
Samantha
,
Vijay Milton
,
சினிமா