விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ. 2 கோடிக்கும் அதிகமான தொகையைக் கொடுத்து கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உண்மையாகும் பச்சத்தில் விஜய் கேரியரில் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனையான படமாக புலி
உருவெடுக்கும்.
மேலும் விஜய், சுதீப், ஸ்ரீதேவி போன்ற மாபெரும் நட்சத்திரங்கள் இடம்பெறுவதால் இதுவரை அமெரிக்காவில் வெளியான அனைத்து தமிழ் படங்களின் வசூல் சாதனைகளையும் புலி முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா