ஆரம்ப காலங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வந்த அனுஷ்கா, சமீபகாலமாக அதையெல்லாம் தவிர்த்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் தேவசேனா என்ற வயது முதிர்ந்த பெண்மணி வேடத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அடுத்து வெளிவரவிருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர, தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்தது. இதில் அனுஷ்காவின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.
இதைவிட, நேற்று இப்படத்தின் மற்றொரு போஸ்டர் வெளிவந்தது. இதில் அனுஷ்கா குண்டான தோற்றத்துடன், டீஷர்ட்டும், நைட் பேண்டும் அணிந்துகொண்டு ஓடுவது போன்ற தோற்றத்தை கண்டு ரசிகர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தனர்.
இதுவரை எந்த படத்திலும் பார்க்காத புதுமையான அனுஷ்காவை பார்த்ததும் ரசிகர்கள் ஒரு பக்கம் வியப்பில் ஆழ்ந்தாலும், அவருக்கு பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் அனுஷ்காவுடன் ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளார். குண்டான அனுஷ்காவை ஆர்யா உடற்பயிற்சி செய்யவைத்து எப்படி இஞ்சி இடுப்பழகியாக மாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி.
இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் தசரா தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா