இணையத்தில் வெளியான புலி படத்தின் 18 நிமிட காட்சிகள்..!!
என்னடா புலி படத்தோட 18 நிமிட காட்சி லீக் ஆகிவிட்டதா என்று அதிர்ச்சியோடு க்ளிக் செய்த அனைத்து வாசகர்களுக்கு பெரிய வணக்கம், வெளியானது வீடியோ அல்ல, கதைதான்.
விஜய் ஒரு ஏழை குடும்பத்தில் மகனாக பிறக்கிறார், அப்போது ஊரில் ஏற்படும் கலவரத்தில் குழந்தை விஜய் இடம் மாறி ஒரு பெரிய தொழிலதிபரிடம் கிடைக்கிறார். அது அவருடயை குழந்தை என்று நினைத்து அந்த குடும்பம் அவரை தூக்கிக் கொண்டு சென்று வீரத்துடனும், விவேகத்துடனும் வளர்க்கிறது. இளைஞனாக மாறியபின் நந்திதா மீது காதல் கொள்கிறார், அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி கொண்டு செல்ல அவரை காப்பாற்ற செல்லும் விஜய்க்கு நந்திதா பிணமாக கிடைக்கிறார். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயல்கிறாராம் விஜய்.
அப்போது மலையிலிருந்து விழும் விஜய் ஒரு அரண்மனை வாசலில் விழுகிறார். அங்கே எப்படி வந்தோம் என்று தெரியாமல் குழப்பத்திலிருக்கிறார். அந்த நாட்டு மலைவாசிகளுடன் சேர்ந்து வாழும் விஜய், நாட்டின் மகாராணியாக இருக்கும் ஸ்ரீதேவியிடம் சிப்பாயாக பணிபுரிகிறார். அவ்வப்போது வரும் எதிரிகளிடமிருந்து விஜய் நாட்டை காப்பாற்ற, மக்களிடையே விஜய்யின் செல்வாக்கு அதிகரிக்கிறது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது காதல் வயப்படுகிறார். இது தெரியாமல் நடிகை ஹன்சிகா விஜய்யை காதலிக்கிறார்.
மக்களிடையே செல்வாக்கு அதிகமாகும் விஜய்யை பார்த்து பொறாமைப்படுகிறார் சுதீப். இதனால் விஜய்யை கொன்று அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அப்போது விஜய்யை அடித்து மகாராணியிடம் தேசத்துரோகியாக காட்டுகிறார் சுதீப். இதில் ஸ்ரீதேவியிடம் இருக்கும் ஒருவிதமான சக்தி மூலம் ஒருவரின் பழைய கால நினைவுகளை பார்க்க முடியும், அதன் மூலம் ஸ்ரீதேவி விஜய்யின் தலை மீது கை வைத்து அவரின் பழைய நினைவுகளை பார்க்கிறார். அப்போது அவர் காணாமல் போன தன் மகன் என்பது தெரிய வருகிறது. அதன்பின் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களே கதை என்று கூறப்படுகிறது…