தங்கள் நாயகர்களை அசிங்கப்படுத்தும் விஜய், அஜித் ரசிகர்கள்..!!

3:02 AM |
தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இதற்கு முக்கிய காரணம் இவர்களின் ரசிகர்கள் தான்.

இந்நிலையில் இவர்கள் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது வழக்கம் தான். ஒரு சில நேரங்களில் ட்ரண்ட் செய்து தங்கள் கெத்தை காட்டுவார்கள்.

ஆனால், கடந்த வருடம் சில மோசமான வார்த்தைகள் கொண்ட டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்தனர். இதை கண்ட பல வட இந்தியர்கள் கிண்டலாக பேசி சிரித்தனர்.

இதை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளால் அதுவும் தமிழில் ட்ரண்ட் செய்து தங்கள் நாயகர்களை அவர்களே அசிங்கப்படுத்திக்கொண்டனர்.

இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து வருவது வருத்தமளித்தாலும், இன்னும் இதுக்குறித்து விஜய், அஜித் இரு தரப்பும் மௌனம் சாதிப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
மேலும் வாசிக்க…

நல்லது சொல்ல போய் விஜய்-அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட உதயநிதி..!!

9:18 PM |
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது அதிக ரசிகர்கள் விஜய், அஜித்திற்கு தான். பெரும்பாலும் இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் இளைஞர்களே.

நேற்று தெறி டீசர் வந்தவுடன், வேதாளம் டீசரை கிண்டல் செய்ததற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் உடனே கிண்டலில் இறங்கினர். இதை பார்த்த உதயநிதி, இருவருமே நல்ல நண்பர்கள் ஏன் நீங்கள் சண்டைபோடுகிறீர்கள் என டுவிட் செய்தார்.

உடனே பல ரசிகர்கள் உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்ற ரேஞ்சில் அவருக்கு பதில் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். நல்லதுக்கே காலம் இல்லை.


மேலும் வாசிக்க…

கலக்கப்போவது விஜய் ரசிகர்களா? அஜித் ரசிகர்களா?

12:38 AM |
சமூக வலைத்தளங்களில் எப்போதும் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டே தான் இருப்பார்கள். இதில் குறிப்பாக டுவிட்டரில் யார் ட்ரண்ட் செய்வது என்ற மோதல் இருந்து வரும்.

இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி தெறி படத்தின் டீசர் வரவுள்ளது, அன்றைய தினம் தான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வந்த 1 வருடம் ஆகவுள்ளது.

இதனால், இரு தரப்பினரும் காமன் டிபி, # டாக் என தற்போதே உருவாக்கி விட்டனர். யார் ட்ரண்டிங்கில் மிரட்டப்போவது என பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com