ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைக்கும் மிருதன் பட அசத்தலான PROMO

1:39 AM |
மேலும் வாசிக்க…

அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்! ஷாக் கொடுக்கிறார் லட்சுமிமேனன்..!!

10:43 PM |
அஜீத் பற்றி பேசினால் ஆளுக்கொரு சம்பவம் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அது அவரது எளிமை பற்றியும், ‘‘எடுத்துக்கோ” என்று கொடுத்தது பற்றியுமாகதான் இருக்கும்! நாலு பேருக்கு செய்யறது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும் என்று இருப்பவர் அவர். அப்படியிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிற தகவல்கள் பல, அவரது கிரீடத்தில் மேலும் மேலும் சிறகுகளை சொருகிக் கொண்டேயிருக்கும். ஆனால் முதன் முறையாக ஒரு விஷயத்தை லட்சுமிமேனன் மறுத்திருக்கிறார். ஆனாலும் தலைபோகிற சறுக்கல் இல்லை அது.

வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனன், அப்படி நடிக்கும் போது அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பாரா தெரியாது. ஆனால் படம் வந்த பின், “வாம்மா தங்கச்சி” என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள். பாசமலருக்கு அப்பால, முள்ளும் மலரும் வந்தது. முள்ளும் மலருமுக்கு அப்பால வேதாளம்தான் என்கிற அளவுக்கு தங்கச்சி சென்ட்டிமென்ட் தாறுமாறாக கொப்பளித்த படம் அது. படத்தின் முதல் பிரதியை பார்த்த அஜீத், லட்சுமிமேனனுக்கு பேசியதை விட ஐந்து லட்சம் எக்ஸ்ட்ரா கொடுக்கச் சொன்னதாக ஒரு தகவல் வந்தது அப்போது.

அது பற்றிதான் சமீபத்தில் சென்னை வந்த லட்சுமிமேனனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “ஆமாம்… நானும் அந்த செய்தியை படிச்சேன். அஜீத் சார் சொல்லியிருந்தா நல்லாயிருந்துருக்கும். ஆனா அவர் சொன்னாரான்னு தெரியல. எனக்கு யாரும் பணம் கொடுக்கலையே?” என்றார் லட்சுமிமேனன்.
மேலும் வாசிக்க…

மிருதன் படக்குழுவினருக்கு அதிர்ச்சி..!!

9:49 PM |
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மிருதன். இப்படம் ஹாலிவுட்டில் பிரபலமான சோம்பி(zombie) வகையை சேர்ந்தது, இன்று இப்படத்தின் சென்சார் காட்சி சென்னையில் நடந்தது.

இப்படத்தை பார்த்த சென்சார் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

எப்படியாவது யு/ஏ கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு இது கொஞ்சம் கவலையான விஷயம் தானே, இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மும்பையில் உள்ள சென்சார் குழுவுக்கு அனுப்பவுள்ளது.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு லக்ஷ்மி மேனனின் வேண்டுகோள்..!!

8:54 PM |
முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால்..

சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி கணக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த போலிகளால் வரும் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் இன்றைய சினிமா துறையில் சகஜமாகிவிட்டது.

முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன், "ட்விட்டரில் என்னுடைய பெயரில் ஒரு போலி கணக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன், அது நான் இல்லை. இதை யார் நிர்வகிப்பது என்று எனக்கு தெரியாது, தயவு செய்து யாரும் அந்த போலி கணக்கை தொடர்பு கொள்ளவோ, Follow செய்யவோ வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் "எனக்கு முகநூலில் மட்டுமே கணக்கு உள்ளது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அதை கூட நான் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை" என தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க…

லட்சுமிமேனனின் முகநூல் பக்கத்தில் நீக்கப்பட்ட பதிவுகள் இவைதான்..!!

11:16 PM |
பெண்கள் இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இப்படி உடை உடுத்த வேண்டும் அப்படி உடை உடுத்த வேண்டும் என பத்தம்சக் கோட்பாடுகள் மட்டும் தான் இன்னும் வெளியாகவில்லை. அந்த அளவிக்கு பெண்களுக்கு அட்வைஸும், அடக்குமுறையும் அதிகரித்து விட்டன. இதற்கு ஏதிராகப் பலரும் பலவிதமாகக் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தனது முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதற்கு சரியான புகைப்படங்களாக அமைந்துள்ளது அவை.

யாரோ இந்தப் பதிவை என் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்... எவ்வளவு தைரியம் எனக் கேட்டுள்ளார் லட்சுமி மேனன்.

புகைப்படங்களும் அதன் அர்த்தங்களும்.

ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் அது வாய்ப்பல்ல , அது ஒரு பொறுப்பு




உங்கள் மகளிடம் பாதுகாப்பு குறித்து பேசும் அதே தருணம் உங்கள் மகனிடம் அப்படியே சத்தியம் வாங்குங்கள் (அவனால் பெண்களுக்கு எந்த பாதிப்பும் வராது என)



என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.என் மனம் சொல்லும் படி கேட்டு எனக்கு பிடித்தாற் போல் நடக்கிறேன் அதற்காக நான் பிரச்னையை உருவாக்கும் கிளர்ச்சியாளர் என அர்த்தம் அல்ல.



என்னால் ஜீன்ஸ், ஷர்ட் அணிய முடியும், என் கூந்தலை குட்டையாக வெட்டிக்கொண்டு ஒரே கல்பில் ஒயின் குடிக்க முடியுமெனில் நான் எனது கோட்டைத் தாண்டுகிறேன் என அர்த்தமில்லை.



இப்படி சில வாசகங்களைத் தாங்கிய பெண்களின் அந்தப் புகைப்படம் பெண்களும், ஆண்கள் போல் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆறறிவு உள்ளது. வகுப்பெடுக்க அவசியம் அல்ல என்பதை உணர்த்துகிறது.



மேலும் வாசிக்க…

மிருதன் படத்தில் இருந்து முன்னாள் காதலி வீடியோ பாடல்..!!

1:25 AM |
மேலும் வாசிக்க…

Laxmi Menon Dazzling Dance Performance@SIIMA 2014 : Malaysia

1:41 AM |


நடிகை லட்சுமி மேனன் அட்டகாசமான நடனம்..!!! - வீடியோ
Laxmi Menon Dazzling Dance Performance@SIIMA 2014 : Malaysia

மேலும் வாசிக்க…
2015 Thediko.com