ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாளான ஏப்ரல் 17-ல் வெளியாகும் என தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.
மொத்தம் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த டீசருக்கான பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது தீவிரமாக கவனித்து வருகிறார். முதலில் இணையத்தில் வெளியாகும் இந்த டீசர், பிறகு தியேட்டர்களிலும் திரையிடப்படவுள்ளது.
வரும் மே 10-ம் தேதியுடன் இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிவுக்கு வருகிறது. அதைதொடர்ந்து ஜூன் மாதம் சில பாடல் காட்சிகளுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் இப்படம் திரைக்கு வரும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் வாசிக்க…